Sunday, December 22, 2013

மறைந்த கருப்பு நிலா நெல்சன் மண்டேலா – வீரவணக்கம்

ஒரு சமுகத்தின் விடுதலை வீரன் இன்னொரு சமுகத்தின் தீவரவாதி!!
      (one man’s freedom fighter is another man’s terrorist)


1960 களில் ஒரு நாள் அது. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி தலை விரித்து ஆடிய வருடங்களில் ஒன்று. மூன்று சிறுமிகளுடன் ஒரு இந்திய வம்சாவளி பெண், தன் வாகனத்துக்கு வாயு ஏற்ற ஜோஹான்ஸ்பெர்க்(Johannesburg) அருகே இருந்த வாயு நிலையத்திற்கு சென்றார். அந்த வாயு நிலையத்தின் முதலாளி மற்றும் வேலையாட்கள் எல்லோரும் வெள்ளையர்கள் தான். வெள்ளை நிறமில்லாத ஒருவர் வந்து இருப்பதை பார்த்த வெள்ளை வேலையாட்கள், அந்த வாகனத்தின் சாவி மற்றும்,அந்த பெண்மணி வைத்து இருந்த மொத்த பணத்தையும் பிடுங்கி கொண்டனர்.செய்வதறியாது திகைத்து இருந்த பெண்மணிக்கு மற்றொரு அதிர்ச்சி.இரண்டு சிறுமியர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமாக நின்றார். அவரின் குழப்பத்தின் காரணம் அங்கு இருந்த கழிப்பறையை வெள்ளையர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி இருந்தது. அங்கு இருந்த வெள்ளை ஆண்களின் மத்தியில் இந்த சிறுமியர்கள் தர்மசங்கடமான நிலையில் சிறுநீர்கழிக்க வேண்டி இருந்தது. நிறவெறி ஆட்சிகாலத்தில் நடந்த மிக மோசமான சம்பவங்களில் இது ஒன்று.

 

நிறவெறி ஆட்சியில் வெள்ளையர்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கும், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கிடைக்கும். எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். ஆனால் கருப்பர்கள் வேலைகிடைத்தால் ஜோஹான்ஸ்பெர்க்(Johannesburg) சேரி பகுதியில் ஆட்டுக் கூட்டம் போல் வாழ்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். வேலையில்லாத கறுப்பின மக்களின் வீடுகள் தரைமட்டமக்க பட்டன. அங்கு இருந்து அவர்கள் ஊர் ஒதுக்குப்புறத்திற்கு மாற்றபடுவர்.இது தான் நிறவெறி ஆட்சியின் மிக முக்கிய “பிரிவினை(Separateness)“ கொள்கை.இந்த இரக்கம் இல்லாத கொள்கையை எதிர்த்து போராட யார் வருவார்கள் என்று கறுப்பின மக்கள் ஏங்கிக் கொண்டு இருந்த போது, வந்த இயக்கம் தன் ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ்(ANC). அதன் முக்கிய புரட்சி தலைவர்களில் ஒருவர் தான் “நெல்சன் மண்டேலா”
 

நிறவெறியும் காந்தியும்

ஐரோப்பியர்கள் ஆப்ரிக்கா கண்டத்தை ஆக்கிரமித்த நாள் முதல், பூர்விக குடிகளான கருப்பு இன மக்கள் மீது அடிமைத்தனத்தை ஏற்ற தொடங்கிவிட்டனர். 18 ஆம் நூற்றாண்டின் ஆண்டுகளில் ஆங்கிலேயர் தென் ஆப்ரிக்காவை ஆளத் தொடங்கிய பொழுது, அங்கு இருந்த மக்கள், வெள்ளையர்,கறுப்பர்,நடு நிறத்தவர்(Colored),இந்தியர் என்று நான்கு விதமாக வேறுபட்டு இருந்தனர்.வெள்ளையர்கள் ஆளப் பிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள் ஆளும் வர்க்கத்துக்கு துணை நிற்க வேண்டிய அடிமைகள் என்று ஆளும் வெள்ளை அரசு அறிவித்து இருந்தது.

1890 ஆம் ஆண்டு ஒரு வழக்கு சம்பந்தமாக வாதாட வந்த மகாத்மா காந்தி, வெள்ளையர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்க பட்ட முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்ய முற்பட்ட போது வெள்ளை அதிகாரிகளால் வெளியே தூக்கி எறியப்பட்டார்.இந்த நிகழ்வின் மூலம் இந்தியர்கள் நடத்தப்படும் விதம் கண்டு கொதித்துப் போனார். தென் ஆப்பிரிக்கா இந்திய காங்கிரஸ் என்ற இயக்கத்தின் மூலம் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடினார். சுமார் 21 ஆண்டுகள் அகிம்சை வழி மூலம் போராடிய காந்தி, பெரிய வெற்றி ஏதும் பெறவில்லை என்ற போதும், இந்தியர்களுக்கு என்று ஆங்கிலேயே அரசிடம் சில சலுகைகள் மற்றும் மரியாதைகளை பெற்றுத் தந்தார்.  தன் தாய்நாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருந்த சுதந்திர போராட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிருந்த நிலையில், தென் ஆப்ரிக்காவிற்கு பிரியாவிடை கொடுத்து விட்டு இந்தியா சென்றார் காந்தி.

நெல்சன் மண்டேலா, ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் உருவான வீதம்:

காந்திய வழியை பின்பற்றி, கருப்பு இன மக்களும், ‘ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ்’(African National Congress(ANC)) என்ற இயக்கத்தை உருவாக்கி நிறவெறிக்கு எதிராக போராடினர்.1944 ஆம் ஆண்டு ஒரு நாள், ஜோஹன்னஸ்பர்க்(Johannesburg) தெருவில் ஓடி கொண்டு இருந்த ஒரு ‘ட்ரம்’(TRAM) வண்டியில் முன்று கருப்பு இளைஞர் ஏறினர். இதை பார்த்த ட்ரம் கண்டக்டர் உடனே போலீசை அழைத்தார். சில நிமிடத்தில் அங்கு வந்த போலீஸ் அந்த முன்று கருப்பு இளைஞர்களை கைது செய்தது. கைது செய்வதற்கு காரணம், தென் ஆப்ரிக்கா பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய ‘குபார்(Kuffar)’(கருப்பர்கள் குறித்த இழிவான சொல்) அனுமதி இல்லை. அந்த இளைஞர்களில் ஒருவர் தான் “நெல்சன் மண்டேலா’
இந்த கைது சம்பவம், சாதாரணமாக சட்டம் படித்துகொண்டு இருந்த மண்டேலாவிற்கு, நிறவெறி ஆநீதி எதிர்த்து போராட வேண்டும் என்ற தாக்கத்தை  ஏற்படுத்தியது. ஆப்ரிக்கா இளைஞர் காங்கிரஸில் சேர்ந்த மண்டேலா அஹிம்சை முறையில் வெள்ளையர்களுக்கு எதிராக போராட்டத்தை 1944 ஆம் ஆண்டு துவங்கினார். பல ஆண்டு நடைபற்ற கருப்பு இன மக்களின் அகிம்சை போராட்டம் ஏகாதிபத்திய வெள்ளை அரசை ஒரு நெருக்கடி நிலைக்கும் தள்ளவில்லை. 1961 ஆம் ஆண்டில் ஷர்ப்விள்ளே(Sharpville) என்ற இடத்தில் ஒரு அகிம்சை போராட்டத்தின் போது, 70 அப்பாவி மக்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லபட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மண்டேலா உட்பட பல கறுப்பின தலைவர்கள் அகிம்சை போராட்டம் இனி செல்லுபடி ஆகாது என்று முடிவுக்கு வந்தனர். வன்முறை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

வன்முறை நாட்கள்:

தான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை என்று மண்டேலா கூறிய போதும், மாவோ(Mao) மற்றும் பிடேல் காஸ்ட்ரோ(Fidel Castro) வின் கொரில்லா சண்டை யுத்திகளை பெரிதாக விரும்பினார். இதற்காக மொரோக்கோ மற்றும் எதியோபியா சென்று ஆயுத பயிற்சி எடுத்து கொண்டார்.சில உள்நாட்டு வன்முறை தாக்குதலிலும் ஈடுபட்டார். தாங்கள் மேற்கொள்ளும் வன்முறை போராட்டத்திற்கு அதரவு திரட்ட வெளிநாட்டு அதிகாரிகளை சந்திக்க முயற்சி செய்தார்.அப்படி ஒரு முறை அமெரிக்க அதிகாரியை சந்திக்கச் சென்ற மண்டேலா தென் ஆப்ரிக்கா போலிசால் கைது செய்ய பட்டார். சில செய்தி ஊடகங்கள் மண்டேலாவின் கைது சம்பவத்தில் அமெரிக்கா உளவு இயக்கமான CIAவின் பங்கு உள்ளது என்று குறிப்பிடுகிறனர். நீதிமன்றம் அவரது வன்முறை சம்பவங்களுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் விதித்தது.
1964 ஆம் ஆண்டில் வன்முறையில் ஈடுபட்ட ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக தென் ஆப்ரிக்கா போலீசால் பிடிக்கப்பட்டனர். ரிவோனியா டரியல்(RIVONIA Trial) என்ற பெயரில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் தேச துரோகம் மற்றும் தேசிய அரசை கவிழ்க்க சதி செய்தாகவும், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தகாவும் குற்றம் சாட்டப் பெற்றனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் முக்கிய தலைவராக இருந்த மண்டேலாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

சிறைவாசம்:

தென் ஆப்ரிக்கா கேப் டவுன் அருகே இருந்த ரோப்பேன் தீவு(Robben Island) சிறையில் மண்டேலா அடைக்கப்பட்டார்.இது நமது அந்தமான் சிறை போன்று கொடுமைகள் நிறைந்த சிறை.மண்டேலா முதன் முதலாக இந்த சிறையில் கால் பதித்த போது,அங்கு இருந்த வெள்ளை சிறை காவலர் ஒருவர், “இனி நீ உன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாது, உன் இறப்பு இங்கு தான் ஏற்படும்” என்று ஏளனமாக பேசினார்.வசதிகள் குறைந்த கடைசி நிலை(Class D) சிறை இருப்பிடம் மண்டேலாவிற்கு வழங்க பட்டது. சிறைசாலையில் கல் உடைக்கும் பணியை மேற்கொண்டார்.சுண்ணாம்பு  கற்களை உடைக்கும் போது, சூரிய ஒளி பிரதிபலிப்பில் இருந்து நமது கண்களை காக்க கண்ணாடி அணிய வேண்டும். ஆனால் மண்டேலவிற்கு சிறையில் கண்ணாடிகள் மறுக்க பட்டன. இதனால் ஒரு கண்ணில் பாதி பார்வையை அவர் இழந்தார்.மண்டேலா சிறையில் வாடிய காலத்தில், அவரின் தாயாரும்,சகோதரரும் மறைந்தனர். அவர்களின் இறுதி சடங்கிற்குக் கூட பங்கேற்க வெள்ளை அரசு அனுமதி தரவில்லை.

 

“மண்டேலா ஒரு தீவரவாதி” – அமெரிக்கா,பிரிட்டன்:

நிறவெறி அரசுக்கு எதிராக உலகமெங்கும் நெருக்குதல் வர, “வன்முறையை கை விட்டால், விடுதலை செய்ய தயார்” என்று வெள்ளை அரசு மண்டேலாவிற்கு தூது அனுப்பியது.இதை நிராகரித்த மண்டேலா “என் உயிரிருக்கும் வரை நிறவெறிக்கு எதிராக போராடுவேன்” என்று பதிலளித்தார்.1977 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா நிறவெறி அரசுக்கு எதிராக, அமெரிக்கா,பிரிட்டன் உதவியுடன் ஐ.நா பொருளாதார தடை விதித்தது. இந்தப் பெரிய நிகழ்வு நடந்த போதும், அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் மண்டேலா விடுதலை பற்றி பேச மறுத்துவிட்டன. அக்கால சோவியத் கூட்டமைப்புடன்(Soviet Union) இருந்த பனிப் போர் காரணமாகவும், ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் கட்சியின் சில கொள்கைகள் கம்யூனிஸ்ட் கொள்கைகளுடன் ஒத்து இருந்ததால், மண்டேலாவை கம்யூனிஸ்ட் ஆக இந்த நாடுகள் சித்தரித்தன. அப்போதைய அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஜனாதிபதிகள் “ரீகன்(Reagon)”,”தாட்சர்(Thatchar)” மண்டேலாவை “தீவரவாதி” என்றே கூறினர். அமெரிக்கா தீவரவாதி பட்டியலில் 2008 ஆம் ஆண்டு வரை மண்டேலாவின் பெயர் இருந்தது என்பது ஒரு மோசமான உண்மை. நிறவெறி அரசிற்கு எதிராக ஐ.நா பொருளாதார தடை விதித்த போதும்  இஸ்ரேல் மற்றும் தைவான் போன்ற நாடுகள் மறைமுகமாக நிறவெறி அரசை ஆதரித்து வந்தன.

வெற்றி வெற்றி வெற்றி !!:

1989  ஆம் ஆண்டு டி க்ளெர்க்(D Klerk) என்ற மிதவாத வெள்ளை ஆட்சியாளர் நாட்டின் பிரமமந்திரி ஆனார். தென் ஆப்ரிக்கா – அங்கோலா போரில் இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாடு மிகவும் நலிவு அடைந்து இருந்த நேரம் அது. நாட்டை காப்பாற்ற டி க்ளெர்க் முக்கிய முடிவு ஒன்று எடுத்தார்.மண்டேலா மற்றும் அவரின் ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் உறுப்பினர் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் மீது இருந்த தடைகளை விலக்கினார். Feb 11 1990, ஞாயிறு அன்று மண்டேலா விடுதலை செய்யப் பட்டார். சில மாதங்களில் ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்றார். பின்பு டி க்லேர்க்வுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிறவெறி அரசுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பங்கேற்று மாபெரும் வெற்றி அடைந்தார். நாட்டின் முதல் கருப்பு பிரதமர் ஆனார்.

 பிரதமாரான முதல் உரையில் இவ்வாறு கூறினர்

 “இறுதியில் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்.ஆனால் நமது போராட்டம் இன்னும் முடிய வில்லை. பசி,வறுமை,பாலியல் பாரபட்சம் போன்ற பெரிய தீங்குகளுக்கு எதிராக போராடுவோம்.இந்த போராட்டத்தில் வெள்ளையர்,கறுப்பர் என்று பாரபட்சம் கிடையாது.இனி இந்த அழகான நாட்டில் அடிமைத்தனம் வரவே வராது. கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார்”.

 

ஆட்சிகால சாதனைகள்:

சுமார் ஆறு ஆண்டுகாலம் பிரதமராக ஆட்சி செய்த மண்டேலா,1999 ஆம் ஆண்டில் அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு வழிவிட்டு பிரதமந்திரி பொறுப்பில் இருந்து விலகினார்.மண்டேலாவின் ஆறாண்டு கால சாதனையாக ஜனநாயகம் தழைத்து ஓங்கியது. நிறவெறி ஆட்சியின் போது ஒரே ஒரு வெள்ளை கட்சி மட்டும் தன் இருந்தது. மண்டேலாவின் ஆட்சியின் போது பல ஜனநாயக கட்சிகள் உதித்தன. வெள்ளையர்களை பழி வாங்க,“வெள்ளையர்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பு” போன்ற செயலில் இடுபடாமல், மிகுந்த அறிவாற்றலால் எல்லோரையும் ஒருங்கிணைத்து, நாட்டு பொருளாதாரத்தை வேகமாக வளர்த்தார். நிறவெறி ஆட்சியால், பெறும்பாலான கருப்பு இன மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டு இருந்தனர், இவர்களின் நிலை மண்டேலா ஆட்சியில் முன்னேற்றம் அடைந்தது. ஊட்டச்சத்தின்மை (Malnutrition) காரணமாக குழந்தைகள் இறப்பு, வெகுவாக குறைக்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவின் மிக பெரும் தலைவலியாக இருந்த “எய்ட்ஸ்(AIDS)” நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த மண்டேலா அரும்பாடு பட்டார்.இந்த மாபெரும் புரட்சி நாயகனுக்கு 1994 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசும், இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டன.

இப்படி கருப்பு இன மக்களின் ஒளியாகவும், உலக புரட்சி உருவகமாகவும் இருந்த கருப்பு நிலா,அமைதிப் புறா,கருப்பு சிங்கம் Dec 6 2013  தினத்தன்று மறைந்தது. உலக மக்கள் மற்றும் உலகத் தலைவர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.அவர் உடல்  மண்ணிற்கு சென்ற போதும், அவரின் புரட்சி வாக்கியங்கள், பல புரட்சி இயக்கங்களுக்கு அநீதியை எதிர்த்துப் போராட உந்து கோலாக இருக்கும். இந்த புரட்சி நாயகனுக்கு வீரவணக்கம்!!

 


“மனிதனாக பிறக்கும் போது யாரும் தோலின் நிறம், பிறப்பின் காரணமாக வெறுக்கப்படுவது இல்லை. அப்படி வெறுப்பவர்களுக்கு நாம் அன்பை சொல்லி தர வேண்டும். ஏனென்றால் மனித இதயத்திற்கு அன்பு இயல்பாக வரும்”
                                                                                   -நெல்சன் மண்டேலா(1918 – 2013)

http://siragu.com/?p=11592

Friday, December 20, 2013

Mandela's Rainbow Nation Policy



Why Madiba is one of Inspirational Icon in my life?

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong.
-          Mahatma Gandhi

During the bloody partition, Gandhi advocated forgiveness policy to Indians to save lives from Hindu/Sikhs-Muslim riots. With recent riots in UP, it appears that bitter rivalry between the communities still exists in patches and Indians haven’t accepted fully what Gandhi preached them long back. People of South Africa too exposed to same ‘1947’ situation in 1994 when the Apartheid regime ended. When Mandela was released in 1992, country was in bad shape. Power struggle within African National Congress was visible on the streets of Durban with unabated violent incidents. Sensing the loopholes, apartheid nationalists secretly armed the trouble mongers with guns and money. With the country spiraling into civil war, Mandela gave a pacification speech in front of agitated 100,000 ANC supporters.

“Take your knives, and your guns  ... and your pangas.
… and throw them into sea

After massive win of ANC in 1994, Whites feared a lot believing the blacks may be in retributive mood to avenge the sufferings they consumed during apartheid rule. Under Apartheid regime, blacks were superimposed with separateness policy. Education, healthcare, public transportation, even voting right appeared taboo for them. With land acquisition policy start happening in countries like Zimbabwe, Angola, Mozambique, whites argued among themselves that they too will get same treatment.  But with election of Mandela as president, has saved the whites and the new concept called “Rainbow Nation “ had been introduced to fellow South Africans. Mandela himself an Enthusiastic follower of Gandhi, taught the beautiful topic of forgiveness and reconciliation to blacks. The racial bloodbath feared by many had been averted with this concept.



In his first speech as president, below were the words from him in building a nation which was racially disturbed for decades.

"We enter into a covenant that we shall build the society in which all South Africans, both black and white - will be able to walk tall. A Rainbow Nation at peace with itself and the world."

With fellow blacks, questioning Mandela that “How to reconcile with same persons who beaten them, tortured them, grabbed their fundamental rights?”.Mandela replied that

"Forgiveness liberates the soul.Forgiveness liberates the fear.Thats why it is such a  
  powerful weapon"

Following the footsteps of ‘Abraham Lincoln’, Mandela concentrated more on reconciliation policy than on nation’s crime control,currency crisis issues at that time. Two of his finest moments as a reconciler came when he had tea with the widow of apartheid architect Hendrik Verwoerd and when he donned the Springbok rugby jersey to congratulate the mainly white team's victory in the 1995 Rugby World Cup.
In reality after nearly two decades from independence, blacks haven’t achieved the socio-economic status to the expected extent. Yet white South Africans, who account for 8.7 percent of the population of 53 million, on average earn six times more than their black counterparts and still have access to better education, medical care and housing. Still whites own the land farms and blacks work in these farms with very less wages. With death of Mandela, few white scaremongers started to believe that whites will be threatened, rainbow nation policy will be nullified and nation would be returned to dogs. 

Though “rainbow nation” is far from complete, with opportunities for the black majority still limited,  people of south Africa had defied the stereotypes, negative expectations by gradually built their nation in last few decades. With every passing years, generations among whites and blacks are coming closer and closer. It is heartening to see blacks and whites have been singing and dancing together in honor of Mandela in Pretoria streets, which is never seen two decades back. Lets hope that the nation will set example for the people of other nations about reconciliation after decades of conflict.

Remembering the wonderful words of Mandela 

Never, never and never again shall it be that this beautiful land will again experience the oppression of one by another and suffer the indignity of being the skunk of the world.


Sunday, December 15, 2013

மங்கள்யான் வெற்றியும் இந்திய வானியல் ஆராய்ச்சி வரலாறும்


விஜயபாரதி

Dec 7, 2013   

1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாளில் மனிதனை நிலவுக்கு விண்கலம் மூலம் அமெரிக்கா அனுப்பியது. மனித குலத்தின் மாபெரும் சாதனையாக விளங்கிய இந்தச் செய்தியை மேற்கத்திய ஊடகங்கள் வெகுவாகக் கொண்டாடிய பொழுது, இந்தியா பற்றி கேலியான செய்தியும் ஒன்று ஒரு நாளிதழில் வெளியானது. “இந்திய கிராம பெரியவர்கள் அம்மாவாசை தினத்தன்று(July 15 1969, அதாவது விண்கலம் ஏவப்பட்ட முந்தைய நாள் அம்மாவாசை)விண்கலம் ஏவினால் அது எப்படி நிலவைச் சென்று அடையும் என்று கேள்வி கேட்கிறார்கள்” என்றும், அறிவியல் வளர்ச்சி இல்லாத நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் ஒரு பத்திரிக்கைக்காரர் எழுதிருந்தார். இப்படிப் பேசப்பட்ட ஒரு தேசம், இன்று 44 வருங்டகளுக்குப் பின்பு, சுமார் 5.5 கோடி கி.மீ தொலைவில் உள்ள ஒரு கோளுக்கு விண்கலம் அனுப்பி உள்ளது என்ற செய்தி நம்மிடையே  வியப்பை ஏற்படுத்தவில்லையா?.
வானியல் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தியாவில் 2000 வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. கி.பி 500 வருடத்தின் அருகில் வாழ்ந்த ஆர்யப்பட்டா (Aryabhatta) என்ற மாபெரும் இந்தியக் கணித விஞ்ஞானி, வானியல் தொடர்பான மிகப்பெரும் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தர். இவர் எழுதிய ஆர்யபாட்டியம் (Aryabhattium) என்ற நூலின் முலம், பூமி தன் அச்சின் மூலம் தன்னைத் தானே சுழகிறது என்றும், சூரியனை மையமாகக் கொண்டு வட்ட பாதையில் சுற்றுகிறது என்றும் கூறியுள்ளார். புவியின் சுற்றளவு மற்றும் சூரியனில் இருந்து அதன் தூரம்  குறித்தத் தகவல்களை ஆய்வு செய்து, பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் மொத்த நாட்கள் 354 ஆக இருக்கும் என்று எழுதியுள்ளார். இது கிட்டத்தட்டத் துல்லியமான கண்டுபிடிப்பு. சூரியச் சந்திர கிரகணங்கள் எப்படி உருவாகிறது என்பது பற்றியும் வெகுவாக விளக்கியுள்ளார்.
இதற்குப் பின் காலத்தில் வந்த  பிரம்மகுப்தா, பாஸ்கரா, மாதவா போன்ற இந்திய விஞ்ஞானிகள் வானியல் மற்றும் கோள்கள் சுற்றுளவு, இயக்குப்பாதை பற்றிப் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுப்ரமணியம் சந்திரசேகர் (Subramanium Chandrasekar) என்ற இந்திய பௌதிக விஞ்ஞானி, நட்சத்திரங்கள் பிறப்பு, இறப்புப் பற்றி அரிதான கண்டுபிடிப்பை நிகழ்த்தினர். நட்சத்திரம் பற்றிய ஆராய்ச்சியில் இது ஒரு மிகப்பெரும் மைல் கல். இந்தக் கண்டுபிடிப்பு பௌதிகத்தில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்புக் கொள்கை (Thoery of Relativity) சமந்தமான ஒரு உண்மையைப் பறைசாற்றியது. ஆனால் இந்த கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கச் சந்திரசேகர் நடத்திய போராட்டத்தைப் பற்றி ஒரு புது கட்டுரையே எழுதலாம். அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிலையம் (NASA) இவரின் சாதனைகளுக்குப் பல வகையில் கௌரவித்து உள்ளது.
இந்திய சுதந்திரதிற்குப் பின்பு, அதாவது 1947  வருடத்திற்கு பின்பு, குஜராத்தில் பிறந்த விக்ரம் சாரபாய்(Vikram Sarabhai) என்ற இந்தியப் போதிக ஆராய்ச்சியாளர் இந்தியவினருக்கு என்று விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்று வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். இவருடன் மற்றொரு விஞ்ஞானியான ஹோமி பாபா (Homi Bhaba) வும் வானியல் சமந்தப்பட்ட ஆய்வு நிலையம் நாட்டுக்குத் தேவை என்று மத்திய அரசிடம் வற்புறுத்த, 1969 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (ISRO) உருவானது. இந்த ஆய்வு நிலையத்தின் முதல் உரையில் பேசிய விக்ரம் சாரபாய்,” எங்களின் குறிக்கோள் நிலவிற்கோ, செவ்வாயிற்கோ விண்கலம் அனுப்புவது அல்ல. ஏழை நாடான இந்தியாவிற்கு இந்த ஆராய்ச்சி நிலையம் தேவைதானா? என்று பணக்கார நாடுகள் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றன. அவர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் எங்களைப் போன்ற வளரும் நாடுகளும் வானியல் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியம். நாங்கள் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை”.
இப்படிக் கம்பிரமான உரையுடன் ஆரம்பித்த இஸ்ரோ (ISRO)  சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது. திருவனந்தபுரம் கடலோரம் அருகே இருந்த தும்பா (Thumbha) என்ற இடத்தில் முதல் ராக்கெட் ஆராய்ச்சி நிலையம் அமைக்க விக்ரம் சாரபாய் முடிவு செய்தார். ஒரு தென்னந்தோப்பிற்கு நடுவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. அருகில் இருந்த மாதா கோவில் (St.Mary Magladane Church) விஞ்ஞானிகளின் மைய அலுவலகமானது. அங்கு இருந்த கால்நடைத் தொழுவம் மற்றும் பாதிரியாரின் வீடு விஞ்ஞானிகளின் ஆய்வு நிலையமாகவும், ராக்கெட் பாகங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையாகவும் மாறியது. இந்த ஆரம்பநிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுள் நமது அப்துல் கலாமும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது.
1971 ஆம் ஆண்டு சென்னை அருகே 150 கி.மீ தொலைவில் இருந்த ஸ்ரீஹரிகோட்டா(Sriharikota) என்ற இடத்தில் முக்கிய ராக்கெட் ஏவுதளம் ஒன்று அமைக்கபட்டது. பிற்காலத்தில் முக்கிய துணைக்கோள்கள் மற்றும் ராக்கெட்கள் ஏவும் தளமாக இது மாறியது. சவுண்ட்டிங் ராக்கெட்(Sounding rocket) என்ற ராக்கெட்களை இஸ்ரோ ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டது. 1975 ஆம் ஆண்டு ரஷ்ய விண்கலம் முலம் இந்தியாவின் முதல் துணைக்கோள் ஆர்யப்பட்டா (“Aryabhatta”) விண்ணுக்கு ஏவப்பட்டது. படிப்படியாகத் தகவல் தொழில்நுட்ப துணைக்கோள்(INSAT), வானிலைத் துணைக்கோள்(IRSSAT) என்று இன்று அதிநவீன பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துணைக்கோள்(RISAT) வரை இஸ்ரோ உருவாக்கி விண்ணுக்கு அனுப்பி உள்ளது.
SLV(Satallite launch vehicle), ASLV(Augmented SLV), PSLV(Polar SLV),GSLV(Geosynchronous SLV) போன்ற விண்கலங்களை உருவாக்கிப் பல உள்நாட்டு வெளிநாட்டு துணைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. PSLV விண்கலம் இன்று வரை இஸ்ரோ வின் மிகுந்த பயன்மிக்க ஏவுகளமாக (work horse)  உள்ளது. இது வரை 64 உள்நாட்டு, வெளிநாட்டு துணைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை செய்து உள்ளது. இதில் நிலவிற்கும் செவ்வாய்க்கும் அனுப்பிய துணைக்கோளும் அடக்கம். அதிக எடை கொண்ட துணைக்கோள்களை ஏவ GSLV பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த விண்கலம் குறிப்படத்தக்க வெற்றியை இன்னும் அடையவில்லை. இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது, வருங்காலத்தில் வெற்றி பெற்று, மிகுந்த எடை கொண்ட துணைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் விண்கலமாக GSLV இருக்கும் என்று நம்பலாம்.
2009 ஆம் ஆண்டு நிலவிற்கு சந்திராயன்(Chandrayaan I) என்ற ஒரு விண்கலம் அனுப்பி, விண்வெளி ஆராய்ச்சியில் தான் ஒரு வல்லரசாக மாறி விட்டதை இந்தியா உலகிற்கு உணர்த்தியது. நிலவில் பல கோடி வருடகளுக்கு முன்பு தண்ணீர் இருந்தது என்று ஒரு புதிய உண்மையை சந்திராயன் கண்டுபிடித்தது. சந்திராயன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற  பெயரில் ஒரு விண்கலம் அனுப்பி அதன் முதற்கட்ட வெற்றியும் அடைந்து உள்ளது. திசம்பர்  1 2013 அன்று பூமி சுற்றுப்பாதையை விட்டுச் செவ்வாய்க்குச் செல்லும் பாதைக்கு மங்கள்யான் வெற்றிகரமாகத் தள்ளப்பட்டது.
மங்கள்யான் முதற்கட்டமாக வெற்றி பெற்ற போதும், இன்னும் சுமார் 75 கோடி கிலோமீட்டர் தொலைவைக் கடக்க வேண்டும். இந்த மராத்தான் ஓட்டதில் கிழ்கண்ட சிக்கல்கள் உள்ளன. மங்கள்யான் செல்லும் பாதையில் நிறைய கதிர்வீச்சு உள்ளது, இது துணைக்கோளில் உள்ள மின்னிலுவையில் கருவிகளைச் சேதப்படுத்தி விடாமல் இருக்க வேண்டும். சுமார் பத்து மாத காலத்திற்குப் பின் துணைக்கோளின் இயந்திரம் மீண்டும் இயக்கப்படும் அப்போது அது சீராக வேலை செய்ய வேண்டும். பயணிக்கும் பாதை மிகுந்த குளிர் வாய்ந்த பகுதி, ஆதலால் மங்கள்யானில் உள்ள கருவி ஏதேனும் பழுது அடைந்து விடக்கூடாது. மேலே கூறியவற்றை விட கொஞ்சம் சிக்கலான பிரச்சனை இது தான், பூமியில் இருந்து செவ்வாய்க்கு ஒரு கட்டுப்பட்டு சமிக்ஞை(control signal) அனுப்பினால் அது சென்றடைய ஆகும் நேரம் சுமார் இருபது நிமிடம்.
இதற்கு மறுமொழி வர இன்னும் ஒரு இருபது நிமிடம். ஆக இந்த இடைபட்டத் தகவல் மாற்றத்திற்கு நாற்பது நிமிடம் ஆகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் துணைக்கோள் எதிலும் தவறான இயக்கம் ஆனால் விஞ்ஞானிகள் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி இந்தத் தடங்கல்கள் எல்லாத்தையும் தாண்டி செவ்வாயைத் துணைக்கோள் அடைந்தால் அது மாபெரும் வெற்றியாக இருக்கும்.
செவ்வாய்க் கிரகத்தை நோக்கி இஸ்ரோ அனுப்பிய விண்கலத்திற்கு உள்நாட்டு மக்களிடமும் வெளிநாட்டு விஞ்ஞானிகளிடமும் அதிக வரவேற்பு இருந்த போதும் பல குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து உள்ளது. 2012 ஆகஸ்ட் மாதம் இந்தியப்பிரதமர் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பப்போகிறோம் என்று அறிவித்த நாள் முதல், இந்தியா ஒரு ஏழை நாடு இதற்கு ஏன் இவ்வளவு செலவு? இது அதிகமான தேவையல்லாத ஆராய்ச்சி என்று கேள்விகள் எழும்பின. 2010 ஆம் ஆண்டு ஐ.நா உலக வறுமை பற்றி வெளியிட்ட ஒரு தகவலில் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற எட்டு மாநிலத்தில் வாழும் வறுமை கோட்டுக்குக் கிழே வாழும் மக்கள் எண்ணிக்கை சுமார் 42 கோடி. இது ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள 26  ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களைக் காட்டிலும் அதிகம் என்று தகவல் வெளியிட்டு இருந்தது. மங்கள்யான் உருவாக்க ஏற்பட்ட மொத்த தொகை 460 கோடி. இந்தத் தொகையை நாட்டின் வறுமையைப் போக்க வழிசெய்து இருக்கலாம் என்று விமர்சர்கள் குறை கூறி இருந்தனர்.
முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மாதவ நாயர்(Madhava Nair),  இன்னும் வேறு மாதிரி விமர்சிக்கிறார். “இந்த மங்கள்யான் திட்டம் பூகோள அரசியல் காரணமாக அவசரப்பட்டு எடுத்த முடிவு, அதிக எடை கொண்ட துணைக்கோளை ஏவ உருவாக்கப்பட்ட GSLV விண்கலம் இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது. GSLV திட்டத்தில், முதலில் கவனம் செலுத்தி, வெற்றி பெற்று இருந்தால், இன்னும் அதிக அறிவியல் கருவிகள் கொண்ட துணைக்கோளை செவ்வாய்க்கு அனுப்பி இருக்கலாம். இப்போது அனுப்பிய துணைக்கோள் ஒரு தீப்பெட்டி அளவு கொண்டதாகும். இதனால் பெரிய பயன் எதுவும் இல்லை” என்கிறார்.
உள்நாட்டிலேயே இவ்வளவு விமர்சனம் இருக்க,மேற்கத்திய பத்திரிக்கைகள் சகட்டுமேனிக்கு இந்தத் திட்டத்தை குறை சொல்லி இருந்தது. நிறைய பத்திரிக்கைகள் இந்தத் திட்டத்தின் முதல் வெற்றியை சில வரிகளில் புகழ்ந்து விட்டு, பல பத்திரிக்கைகளில் இந்திய வறுமையைக் காரணம் காட்டி விமர்சித்து இருந்தது. வெளிகிரகங்களுக்கு விண்கலம் அனுப்புவது பணக்கார நாடுகளுக்கு மட்டுமே உரிமம் என்றும், இந்தியா போன்ற ஏழை நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டால் அது முட்டாள்தனம் என்று சாடி இருந்தது.
இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய இந்தியா வல்லுனர்கள், 2013 ஆம் ஆண்டின் மொத்த பட்ஜெட் தொகை சுமார் 16 லட்சம் கோடி என்றும், அதில் 27 ஆயிரம் கோடி ஏழை விவாசாயிகள் நலனுக்கும், 33 ஆயிரம் கோடி மகாத்மா காந்தி தேசிய ஏழை மக்கள் நலத்திட்டத்திற்கும் ஒதுக்கி உள்ளது என்றும் விளக்கினர். இந்த இரண்டு தொகைகளை ஒப்பிடுகையில் 460 கோடி என்பது இந்திய மக்கள் தீபாவளி தினத்தன்று விடும் மொத்த பட்டாசு செலவு போன்றதாகும். சர்தார் வல்லபாய் படேலுக்கு நர்மதை ஆறு அருகே குஜராத் மோடி அரசு மாபெரும் சிலை வைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஆகும் மொத்த செலவு சுமார் 2200 கோடி. இது எந்த அளவிற்கு ஏழை மக்களுக்கு உதவும் என்று தெரியவில்லை. இதை ஒப்பிடும் போது நாட்டு அறிவியல் வளர்ச்சிக்கு 460 கோடி செலவு பண்ணுவதில் எந்தத் தவறும் இல்லை என்று வாதிட்டனர்.
விண்ணில் பறக்கும் போது, காகிதத்தில் எழுத, அமெரிக்கர்கள் பல கோடி செலவு செய்து ஒரு பேனாவை உருவாக்கினர். ரஷ்யர்களோ விண்ணுக்கு ஒரு பென்சிலை எடுத்து சென்று பல கோடி மிச்சம் செய்தனர். மேல் கூறிய இந்த உவமை போல செவ்வாய்க்கு இந்தியர்கள் அனுப்பிய விண்கலத்தின் மொத்த செலவு அமெரிக்கர்களின் விண்கலத்தை விட 6 மடங்கு குறைவு. இந்த விலை குறைந்த மங்கள்யான் திட்டம், வருங்காலத்தில் வெளிகிரகங்களுக்கு விண்கலம் அனுப்பும் தொழில் சந்தையில் இந்தியாவுக்கு என்று தனி இடத்தை ஏற்படுத்தும்.
1969 ஆம் ஆண்டு மனிதனை, அமெரிக்கா நிலவிற்கு அனுப்பியது. இது அமெரிக்கா மாணவர்களிடம், ஏன் உலக மாணவர்களிடம் விண்வெளி பற்றிப் படிக்க புதிய ஆர்வத்தை உருவாக்கியது. பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் விண்வெளி சந்தப்பட்ட புதிய படிப்புகள் கொண்டு வரப்பட்டன. இதே போல் மங்கள்யான் வெற்றி பெற்றால் இந்தியா மாணவர்களிடம் விண்வெளி அறிவியலைப் பற்றித் தெரிந்துகொள்ள, மேலும் படிக்க ஆர்வத்தை உருவாக்கும்.
திருமணத்திற்குப் பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ தேடுபவர்கள், இதில் எவருக்கேனும்  செவ்வாய் தோசம் இருந்தால் கல்யாணம் நடப்பது கஷ்டம் என்பார்கள். அது போல செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலங்களுக்கும் ஒரு தோஷம் இருக்கிறது. இது வரை அனுப்பிய 2/3 விண்கலங்கள் தோல்வியிலே முடிந்து உள்ளது. இது வரை எந்த நாடும் எடுத்த முதல் முயற்சியில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பவில்லை. அந்த தோஷத்தை நமது மங்கள்யான் முறியடிக்கும் என்று நம்புவோமாக. அதற்கு நாம் 10 மாதம் பொறுமை காக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 24 –  2014  வரை.
வெற்றி நமதே! வாழ்க விண்வெளி அறிவியல், வாழ்க விஞ்ஞானிகள்.
இவ்வாறு உருவான நிலையங்களின் வெற்றிகளைப் போற்றுவோம், விஞ்ஞான வளர்ச்சி பெறுவோம்.

விஜயபாரதி

http://siragu.com/?p=11355

Monday, December 2, 2013

Subramanium Chandrasekar - Another Legend but forgotten scientist in Indian Astrophysics



With “Mangalyaan” leaving the Earth orbit and jumping into Helio-centric orbit, ISRO proved its space technology was robust and also had a legacy of rich history behind it. Back 2500 years ago, an Indian mathematician namely “Aryabhatta” discovered Helio-centric nature of our solar system. He wrote a book namely “Aryabhattium” in which he extensively explained about the Earth rotation, formation of solar,lunar eclipses.  By calculating distance between sun and earth, he proposed that the earth revolves around sun in 354 Days, which is almost so accurate for the period which has neither  any communication  equipments nor any optical instruments. Later the scientists who followed the footsteps of “Aryabhatta” were Bramagupta, Baskara, Madhava. In 19th Century another Indian scientist made an breakthrough discovery in Stellar physics, His legacy was still unnoticed among the Indian public. He is none other than “Subramanium Chandrasekaran”.His journey of invention, its own complications with his colleagues are discussed below in this article



When Galileo invented the telescope in 16th Century, bubble of enthusiasm developed among the physics researchers who were hunting for the mysteries behind the stars in the night sky. Until before this invention, everybody believed that the sky is unchanging with flood of stars. This invention paved the way for opening of a new branch in physics namely “Astro physics . Before the end of 19th Century Jupiter,Saturn,Uranus,Neptune, one by one all planets were discovered in the solar system. With Einistein’s “Thoery of Relativity” arrived in the beginning of 20th century, the physics saw something new and important aspects of space science. But it was still confined to time travel in space, speed of light, nothing more in the stellar perspective. Astro Scientists were restless to find out the mechanism behind the birth and death of stars in the universe.At this crucial juncture of space thirst, an Indian scientist namely “Subramaniyam Chandrasekaran”  made an important invention, regarding the degeneration of  a star known as “Chandrasekhar Limit”.

Born in Lahore,British India (circa 1910) from the Tamil Brahmin family, he moved along with his parents to Chennai during childhood. With family roots(Nobel laureate Sir CV Raman is his uncle) connected through physics researchers, chandrasekar had huge curiosity in physics studies. In 1930,After completing under graduation in physics from presidency college Chennai, Government of India recommended him to do post graduation and research in University of Cambridge. Working under another great scientist and Professor R.H Fowler, Chandra(he was profoundly called like that) did a quality research and presented many papers in topic related to degeneration of stars and physics behind it.

After 5 long years  of quality research, Chandra invented most famous(and ultimately correct) “Chandrasekhar Limit”. That same year when he tried to explain this concept in one of famous conferences, he was encountered infamous by another great scientist “Sir Arthur Eddington”.
Sir Arthur Eddington, most popular among physicist fraternity in early 19th century, famed for  proving  one of the concepts of “Thoery of relativity”. Einistein in his theory of relativity said that “Light bends due to the gravity”. Eddington went to west coast of Africa in 1919 and photographed the total solar eclipse happened that year. With this phenomenon, he explained the concept of light bending owing to gravity, in accordance of theory of relativity. This invention led him as crown among astrophysicist community. He deposed the concept of “Chandrasekhar limit”, saying its impracticable. Fearing for the popularity of Eddington, physics fraternity neglected the Chandra’s invention. With his invention in sleep state for another few years, finally the scientist community accepted the correct version after death of Eddington”

One of Eddington's photographs of the total solar eclipse of 29 May 1919, presented in his 1920 paper announcing its success, confirming Einstein's theory that light "bends"

Scientists who came later, criticized Eddington and his supporters. Arthur I. Miller person who wrote biography of Chandra describes the betrayal by science community and Eddington behavior as below

“Chandra's discovery might well have transformed and accelerated developments in both physics and astrophysics in the 1930s. Instead, Eddington's heavy-handed intervention lent weighty support to the conservative community astrophysicists, who steadfastly refused even to consider the idea that stars might collapse to nothing. As a result, Chandra's work was almost forgotten”

Legacy

With his invention and research on structure and evolution of stars, he was awarded “Nobel Prize in Physics” in 1983.
·         In 1999, NASA named the third of its four "Great Observatories" after Chandrasekhar.

·         The Chandra X-ray Observatory was launched and deployed by Space Shuttle Columbia on July 23, 1999.

·         The Chandrasekhar number, an important dimensionless number of magneto hydrodynamics, is named after him.

·         The asteroid 1958 Chandra is also named after Chandrasekhar. American astronomer Carl Sagan, who studied Mathematics under Chandrasekhar, at the University of Chicago, praised him in the book The Demon-Haunted World: "I discovered what true mathematical elegance is from Subrahmanyan Chandrasekhar."


Sad truth is, this great scientist was never recognized properly in his native country “India”. On Oct 19 2013,(his birth date) Indian media channels  showed no news of him but were  busy in telecasting another physics scientist Bose who was involved in research with boson few decades back.

Sources: Wikipedia, Other Science magazines

Tuesday, September 24, 2013

Why Earth Survived and Mars Dead/Unknown connection beteween Sun and Earth



With fluke experiment of solar flare measurement, scientists confirmed that the Voyager I exited the solar system. When I started curiously to find out meaning of the word “Solar flare”, it took me to unravel mysterious theories surrounding the solar flare and Earth. It is amazing to know the fact that, we are connected to sun, not only through light, also by stream of charge particles which Sun often releases.  The Sun produces a hot gas that travels through space at a million miles per hour, carrying particles and magnetism outward past the planets called the solar wind. Solar wind is a near continuous fairly gentle outflow of gas from the sun in all directions. When this solar wind becomes a giant hurricane force gust blown suddenly away from the sun in one single direction, its known as solar flare. Since the Earth is immersed in the Sun's atmosphere, any changes on the Sun affects the solar wind flow, paving the way for creation of solar flares with strong gusts of solar wind. Solar flares are followed by colossal coronal mass ejection commonly known as CME. Clouds of ions, electrons and atoms are ejected with CME.

High energy particles (high energy protons) and electromagnetic (X-Rays) radiations released by solar flare are highly hazardous to living organisms. But now question remains is how the earth got survived from these murderous flares for past 4.5 billion years? The answer lies with our earth’s magnetic field which repels these particles away from reaching us. Lack of this magnetic field in other rocky planets like Mars and Venus, made them to become sitting ducks for the murderous CME. During Sun’s initial years, CME was reported to be very high that it completely destroyed the atmosphere of these planets making them dead planet with no life support.


 Solar winds constantly bombard the earth. The earth (in center) is protected by its magnetic field. The more active the sun, the greater the solar winds and the more cosmic radiation from deep space is pushed back, which seems to have a dramatic effect on the earth's climate by warming the earth.  

Earth Magnetic Field

 

Before transverse more about the solar flare, here is the quick summary of earth magnetic field.Our planet’s magnetic field is believed to be generated deep down in the Earth’s core.As still nobody has ever traversed to the center of the Earth, but by analyzing the way shock waves from earthquakes travel through the planet, physicists have been able to work out its likely structure.

Right at the heart of the Earth is a solid inner core, two thirds of the size of the Moon and composed primarily of iron. At a hellish 5,700°C, this iron is as hot as the Sun’s surface, but the crushing pressure caused by gravity prevents it from becoming liquid.Surrounding this is the outer core, a 2,000 km thick layer of iron, nickel, and small quantities of other metals. Lower pressure than the inner core means the metal here is fluid. Differences in temperature, pressure and composition within the outer core cause convection currents in the molten metal as cool, dense matter sinks whilst warm, less dense matter rises. The Coriolis force, resulting from the Earth’s spin, also causes swirling whirlpools.

This flow of liquid iron generates electric currents, which in turn produce magnetic fields. Charged metals passing through these fields go on to create electric currents of their own, and so the cycle continues. This self-sustaining loop is known as the geodynamo.
The spiralling caused by the Coriolis force means that separate magnetic fields created are roughly aligned in the same direction, their combined effect adding up to produce one vast magnetic field engulfing the planet.

Effects of CME in Earth


When a CME reaches the Earth, its impact disturbs the Earth's magnetosphere, setting off a geomagnetic storm. During periods of gusty solar flares and coronal mass ejections, these powerful geomagnetic storms in space near the Earth cause vivid auroras, radio and television static, power blackouts, navigation problems for ships and airplanes with magnetic compasses, and damage to satellites and spacecraft. There is no immediate danger for Astronauts on as their manned missions are generally in low orbit. They do have to be concerned about cumulative exposure during space walks. The energetic particles from a flare or CME would be dangerous to an astronaut while on a mission to the Moon or Mars.
Whenever geomagnetic storms appear,major problem that has occurred has been the temporary loss of electrical power over a large region. The best known case of this occurred in 1989 in Quebec. High currents in the magnetosphere induce high currents in power lines, blowing out electric transformers and power stations. This is most likely to happen at high latitudes, where the induced currents are greatest, and in regions having long power lines and where the ground is poorly conducting. 



Could a solar flare or CME be large enough to cause a nation-wide or planet-wide cataclysm? Scientists reply with skeptical mood that It is, of course, impossible to give a definitive answer for this question. But no such event is known to have occurred in the past and there is no evidence that the Sun could initiate such an event.

Sources: Wikipedia ,other science magazines,NASA